ஒரு MP கூட இல்லை..ஆனாலும் தமிழகத்தை விட்டுக்கொடுக்காத மோடி அமைச்சரவையில் 3 தமிழர்கள்!!

Narendra Modi Government Of India Lok Sabha Election 2024
By Karthick Jun 09, 2024 11:08 AM GMT
Report

மத்திய அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ளது.

மோடி 3.O

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று முடிவுகளும் வெளியாகிவிட்டன. பலமான எதிர்க்கட்சி அமைந்த போதிலும், கூட்டணி ஆட்சியின் உதவியுடன் 3-வது முறை பிரதமராகிறார் மோடி.

Modi 3.O

நாட்டிலேயே 2-வது நபர் அவரே, 3 முறை பிரதமராவது. மும்முரமாக ஏற்பாடுகள் டெல்லியில் கலைக்கட்டியுள்ளது. மொத்தமாக உள்நாட்டு, வெளிநாட்டு அழைப்பாளர்கள் என 7000 பேர் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

3 தமிழர்கள்

மத்திய அமைச்சரவையில் யார் யார் பதவியேற்பார்கள் என்பதே பலரும் எதிர்பார்ப்பாக தற்போது மாறியுள்ளது. குறிப்பாக எத்தனை தமிழர்கள் இருப்பார்கள் என கவனித்து வருகிறார்கள் தமிழர்கள். கடந்த முறை, அதாவது கடந்த 2019 - 2024 மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சராக எஸ். ஜெய்சங்கர் என 2 தமிழர்கள் இருந்தார்கள்.

மோடி பிரதமராவதில் விருப்பமில்லாத RSS..பரிசீலனையில் வேறு பெயர்கள்!! அதிர்ச்சி தகவல்!!

மோடி பிரதமராவதில் விருப்பமில்லாத RSS..பரிசீலனையில் வேறு பெயர்கள்!! அதிர்ச்சி தகவல்!!

அதே நேரத்தில், 2021ஆம் ஆண்டு ராஜ்யசபா எம்.பி'யான எல். முருகன் மத்திய இணை அமைச்சரானார். அவருக்கு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை அமைச்சராகவும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சரகம் அளிக்கப்பட்டது. இம்முறை அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என கூறப்பட்டது.

Modi 3.0 Tea party ministers

ஆனால், அச்செய்திகள் உறுதிப்படுத்தப்படவில்லை. அதே நேரத்தில் மேற்கூறப்பட்ட மூவரும் பிரதமரின் தேனீர் விருந்தில் கலந்து கொண்டார்கள். ஆகையால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது என்றும் தெரிவித்து வருகிறார்கள்.