200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனம்..கொத்தாக மடிந்த ராணுவ வீரர்கள் - நடந்தது என்ன?
ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டத்திலிருந்து ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு டிரக் ஒன்று சென்றுள்ளது.அப்போது பிற்பகல் 2.30 மணியளவில் எஸ்.கே பேயன் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது அங்குள்ள வளைவில் வாகனத்தைத் திருப்ப ஓட்டுநர் முயன்றுள்ளார்.
திடீரென டிரக் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் டிரக் சாலையை விட்டு விலகி பக்கவாட்டிலிருந்த 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவம் குறித்துக் காவல் துறையினருக்கும் மீட்புக்குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்புப் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டனர்.இந்த விபத்தில் காயம் அடைந்த வீரர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில், 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
விபத்து
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.முதற்கட்ட விசாரணையில் மோசமான வானிலையால் சாலை சரியாகக் கண்ணுக்குப் புலப்படாததால் இந்த விபத்து நடந்தது தெரியவந்தது.
முன்னதாக கடந்த மாதம் இதே போன்ற ஒரு விபத்து பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த டிரக் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.