முறுக்கு வியாபாரியை சரமாரியாக வெட்டி கொன்ற 3 பள்ளி மாணவர்கள் - அதிர்ச்சி!
பள்ளி மாணவர்கள் கடைக்குள் புகுந்து வியாபாரியை வெட்டியா சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடூரம்
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு அருகே உள்ள புதுக்குடியை சேர்ந்தவர் செந்தில்நாதன், இவருக்கு வயது. இவரது மனைவி செல்வி, இவர்களுக்கு இசக்கிராஜா (15), ஆறுமுகம் (13), சுடலைமுத்து (12) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
இவர் அந்த பகுதியில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலை பள்ளிக்கு அருகே முறுக்கு கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று திடீரென 3 மர்ம நபர்கள் இவரது கடைக்குள் நுழைந்து இவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.
விசாரணை
இந்நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கொலைசெய்யபட்ட செந்தில்நாதனின் மகன் அங்கு உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த வருடம் 10-ம் வகுப்பு படித்தபொழுது சக மாணவர்களாக இருந்த 3 பேருக்கும் அவரது மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அவரிடம் உள்ள முன்விரோதம் காரணமாக இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, போலீசார் அந்த 3 மாணவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.