மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் 1 முதல் 10 ஆம் வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.
பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
முதலமைச்சர் ஆய்வு
இதனிடையே திருவள்ளூர் மாவட்டம் வடகரை அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
மாணவர்களுடன் அமர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனித்தனர்.
பள்ளியின் உள்ளே சென்ற அவர்,பள்ளியின் வகுப்பறை,சமையலறை,கழிவறை உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார்.
இந்ந நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பினையும், சுகாதாரத்தையும் உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறை தொட்டிகள் மூடியிருப்பதை உறுதி செ்யய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
மக்கள் பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள்
குடிநீர் தொட்டிகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு சுத்தமான குடிநீர் வழங்குவதை கண்காணிக்க வேண்டும் என ஆசிரியர்கள், பள்ளி மேலாண் குழு உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் கட்சி சார்பற்ற முறையில் எம்.பி, எம்எல்ஏ, உள்ளாட்சி பிரதிநிதிகள் பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஆய்வின் போது குறைபாடு இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.