3 சிறுவர்கள் செய்த கொடூரம்..நள்ளிரவில் 10 வயது சிறுவனுக்கு நடந்த துயரம்!
பள்ளி விடுதியில் 10 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி விடுதி
தேனி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் மாணவர்கள் விடுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். அதில் போடியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்துள்ளார் .
இந்த நிலையில், சம்பவத்தன்று 10 வயது சிறுவனுக்கு, அந்த விடுதியில் உள்ள 3 சிறுவர்கள் இணைந்து பாலியல் வன்கொடுமை கொடுத்ததாக்கத் தெரிகிறது.இதனால் மன உளைச்சல் அடைந்த சிறுவன் பள்ளி முடிந்ததும், விடுதிக்குச் செல்லாமல், போடியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
அப்போது தனது பெற்றோரிடம் விடுதியில் நடந்த சம்பவம் குறித்துத் தெரிவித்துள்ளார்.அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய், காயம் அடைந்த சிறுவனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாகத் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில்,காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுவர்களுக்கு 15 வயது கூட நிரம்பாததது தெரியவந்துள்ளது .மேலும் குற்றம் சுமத்தப்பட்ட 3 சிறுவர்களையும், சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்துள்ளனர்.