மனைவியின் பேச்சை கேட்காத கணவன்- நள்ளிரவில் அறையில் நேர்ந்த கொடூரம்!
கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாக்குவாதம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை சேர்த்தவர் சரத்குமார் என்பவர் மோகன் சுந்தரியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அதன்பிறகு இருவரும் தஞ்சாவூரில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று சரத்குமார் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி மோகனசுந்தரி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார் .திருமணம் ஆகி ஒரு ஆண்டுகளே ஆன நிலையில் கடுமையான மன உளைச்சலிலிருந்த மோகனசுந்தரி வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனையடுத்து அடுத்த நாள் காலை சரத்குமார் எழுந்து பார்த்தபோது மனைவி தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.இதனால் செய்வதறியாத திகைத்த சரத்குமார் தனது மனைவி தற்கொலை செய்துகொண்ட விஷயத்தைத் தனது உறவினர் ஒருவரிடம் கூறியுள்ளார்.
தற்கொலை
இதனையடுத்து மனைவி தற்கொலை செய்துகொண்ட அதே புடவையில் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர் .
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை இருவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.