2வது மனைவியுடன் கணவன் - வறுமையில் முதல் மனைவி 2 பிள்ளைகளுடன் தற்கொலை!

Madurai Death
By Sumathi Aug 18, 2023 04:22 AM GMT
Report

தாய், மகன், மகள் ஆகிய மூவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாட்டிய வறுமை  

மதுரை, மருதுபாண்டியர் நகர், ராஜராஜன் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவர் மதுரையில் சுகாதாரத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வாசுகி. இவர்களுக்கு உமாதேவி (45) என்ற மகளும், கோதண்டபாணி (42) என்ற மகனும் இருந்தனர்.

2வது மனைவியுடன் கணவன் - வறுமையில் முதல் மனைவி 2 பிள்ளைகளுடன் தற்கொலை! | 3 Persons Suicide For Poverty In Madurai

சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாண்டியன் குடும்பத்தை பிரிந்து தனியாக சென்றுள்ளார். தொடர்ந்து, கோதண்டபாணியும், உமாதேவியும் வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தனர்.

மூவர் தற்கொலை

இந்நிலையில், 3 நாட்களாக அவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. மேலும், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

2வது மனைவியுடன் கணவன் - வறுமையில் முதல் மனைவி 2 பிள்ளைகளுடன் தற்கொலை! | 3 Persons Suicide For Poverty In Madurai

உடனடியாக விரைந்த போலீஸார் கதவை உடைத்து பார்த்ததில் அழுகிய நிலையில் வாசுகி, உமாதேவி, கோதண்டபாணி ஆகியோர் சடலமாக கிடந்துள்ளனர். 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து விசாரணையில், சில மாதங்களாக உணவுக்கு வழியின்றி வறுமை வாட்டியது. வீட்டிற்கு மின் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்துள்ளனர். அதனால் மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

மின்சாரம் இல்லாததால் அன்றாடம் பயன்படுத்தும் தண்ணீருக்கு கூட மற்றவர்களை நம்பி இருக்கும் நிலையில் தவித்துள்ளனர். பணக்கஷ்டத்தால் 3 பேரும் தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

அதனையடுத்து, பழநியில் இரண்டாவது மனைவியுடன் வாழும் டாக்டர் பாண்டியனுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.