கொரோனா பயத்தால் ஒரே குடும்பத்தில் மூவர் தூக்கு போட்டு தற்கொலை

Corona Tamil Nadu Suicide
By mohanelango Jun 03, 2021 05:26 AM GMT
mohanelango

mohanelango

in சமூகம்
Report

கொரோனா வந்து விடுமோ என்ற பயத்தால் ஒரே குடும்பத்தில் மூவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமுல்லைவாயில் சோழம்பேடு சாலை பகுதியில் சேர்ந்த டில்லி, மல்லிகேஸ்வரி மற்றும் மகள் நாகேஸ்வர் ஆகிய மூன்று நபர்களும் வசித்து வந்தனர்.

டில்லி முத்தா புதுப்பேட்டை அடுத்த பாலவெட்டில் விவசாயம் பார்த்து வந்தார். தற்போது வேலை எதுவும் இல்லாததால் வருமானமின்றி இருந்துள்ளார்.

இந்நிலையில் மகள் நாகேஸ்வரிக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்த ஒரு மாதத்தில் பிரிந்து வீட்டுக்கு வந்துள்ளார். அந்த வழக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்தில் முடிந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தினர் மனவேதனையில் இருந்து வந்துள்ளனர்.

கொரோனா பயத்தால் ஒரே குடும்பத்தில் மூவர் தூக்கு போட்டு தற்கொலை | Family Commits Suicide In Fear Of Corona

இதற்கிடையில் கடந்த ஒரு வார காலமாக மூவருக்கும் காய்ச்சல் இருந்துள்ளது. அப்போது அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்று மெடிக்கல் ஷாப்களில் மருந்து வாங்கி சாப்பிட்டு வந்துள்ளனர்.

காய்ச்சல் அதிகமானதால் கொரோனா வந்து விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக நேற்று இரவு மூவரும் வீட்டின் ஹாலில் உள்ள ஃபேன் கொக்கிகளில் தனித்தனியாக புடவையில் தூக்கு போட்டுக் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இது குறித்து மல்லிகேஸ்வரியின் அண்ணன் வெங்கட்ராமன் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயல் போலீசார் உடல்களை கைப்பற்றி கே.எம்.சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.