பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் படுகொலை - பின்னணி என்ன?
ஒரே வீட்டில் கணவன், மனைவி மற்றும் பணிப்பெண் என 3பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம சம்பவம்
டெல்லியைச் சேர்ந்தவர் சமீர் அஹூஜா. இவரது மனைவி ஷாலு. இருவரும் அசோக் நகர் பகுதியில் நான்கு மாடி வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், கணவன், மனைவி மற்றும் அவர்கள் வீட்டில் பணிப்புரிந்த சப்னா என்ற பெண் ஆகியோர் கொலை செய்யப்பட்டு சடலமகா கிடந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீஸார் உடல்களை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து போலீஸார் கூறுகையில், மர்ம நபர்கள் வீட்டில் இருந்த கணவன், மனைவியை கத்தியால் குத்தி கொன்றுள்ளனர்.
படுகொலை
அப்போது பணிப்பெண் வீட்டிற்குள் சென்றபோது அவரையும் கொன்றுள்ளனர். மனைவி மற்றும் பணிப்பெண்ணின் சடலங்கள் நான்கு மாடி வீட்டின் தரை தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. கணவனின் உடல் மேல் தளத்தில் கண்டெடுக்கப்பட்டது.
நான்கு முதல் ஐந்து பேர் இந்தச் சம்பவத்தில் ஈடுப்பட்டதாக தெரிகிறது. மேலும், இவர்களது 3 வயது மகள் மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். ஆனால் அவரை மர்ம நபர்கள் எதுவும் செய்யவில்லை.
இதுகுறித்து அவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். தற்போது அந்த சிறுமி போலீஸாரின் பாதுகாப்பில் உள்ளார்.
மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழையும் முன் சிசிடிவி கேமராவின் வயரை கட் செய்துள்ளனர். எனவே இது திட்டமிட்ட சம்பவம் என தெரியவருகிறது. அதன் அடிப்படையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.