ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூர கொலை - காவல்துறையினர் தீவிர விசாரணை
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் இருக்கும் உச்வா பகுதியில் கணவன் மனைவியும் அவர்களுடைய 12 வயது மகன் மர்மநபர்களால் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்டவர்கள் பிரேம் கிஷோர் (45), அவருடைய மனைவி கீதா (39) மற்றும் மகன் நைய்திக் (12) என்று தெரியவந்துள்ளது.
வீடு புகுந்து அவர்களை கொலை செய்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக உச்வா பகுதி காவல்துறை அதிகாரி ராஜ் கிஷோர் பேசும்போது, கொலை செய்யப்பட்ட பிரேம் கிஷோரின் வீட்டுக்கு அருகில் வசிப்பவர், நீண்ட நேரமாகியும் பால் பாக்கெட் வாசலில் கிடந்ததை பார்த்துள்ளார்.
அதை தொடர்ந்து அதே நபர் பிரேம் நம்பருக்கு கால் செய்துள்ளார். அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
அவர்கள் வந்து பார்த்தபோது கடையுடன் கூடிய பிரேம் கிஷோரின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்ற போது பிரேம் கிஷோர், அவருடைய மனைவி கீதா மற்றும் அவர்களுடைய மகன் நைய்திக் படுகாயங்களுடன் சடலமாக கிடந்ததாக போலீஸ் ராஜ் கிஷோர் தெரிவித்தார்.
மூவருடைய உடலையும் கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் மூன்று பேரையும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்த தகவலை அவர்கள் தேடி வருகின்றனர்.
குடும்பத்தினர் மூன்று பேர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.