உலகத்தரத்தில் ரெடியாகும் 3 முக்கிய சாலைகள்; இனி 3 மணி நேரம்தான் - எங்கெல்லாம் தெரியுமா?
3 முக்கிய எக்ஸ்பிரஸ் சாலைகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
எக்ஸ்பிரஸ் சாலை
நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக விரைவுச்சாலைகளில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
தொடர்ந்து நடப்பு ஆண்டில் சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே, டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ்வே, டெல்லி - டேராடூன் எக்ஸ்பிரஸ்வே என 3 முக்கிய விரைவுச் சாலைகள் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவுள்ளது.
விவரம் இதோ..
சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே சாலை திட்டம் யன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் தற்போது சென்னை - பெங்களூர் ரீச் ஆக சுமார் 6 மணி நேரத்திற்கும் மேல் ஆகக் கூடிய சூழலில் 3 மணி நேரத்தில் செல்ல முடியும்.
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலை 180 கிலோ மீட்டர் வரை இந்த சாலை குறைக்கிறது. பயண நேரமும் பாதியாக குறையும். மேலும், இது பயன்பாட்டுக்கு வந்த பிறகு சரக்குகள் கொண்டு செல்வதற்கான செலவினங்கள் 9 சதவீதம் அளவுக்கு குறையும்.
டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் வரை சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 3 மாதங்களில் இந்த சாலையானது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டெல்லியில் இருந்து டேராடூன் செல்வதற்கு ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை ஆகும் நிலையில், வெறும் 2 மணி நேரத்தில் சென்று விட முடியும்.