அமெரிக்க புதிய சட்ட மசோதா - 3 லட்சம் இந்திய மாணவர்கள் வெளியேற்றம்?
அமெரிக்க அரசு 3 லட்சம் இந்திய மாணவர்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளது.
எப் 1 விசா
அமெரிக்க கல்வி நிறுவனங்களில் சேர அந்த நாட்டு அரசு சார்பில் எப் 1 விசா வழங்கப்படுகிறது.
இந்த விசாவை பெற்று அமெரிக்க கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியர், விருப்ப பயிற்சி திட்டத்தில் (ஓபிடி) இணைந்து அமெரிக்காவில் பணியாற்ற முடியும்.
இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் ஓபிடி திட்டத்தில் ஏதாவது ஓர் அமெரிக்க நிறுவனத்தில் ஓராண்டு வரை பணியாற்றலாம்.
இந்திய மாணவர்களுக்கு சிக்கல்
அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினீயரிங், கணிதம் உள்ளிட்ட துறைகளில் பட்டம் பெற்றவர்கள், அமெரிக்க நிறுவனங்களில் 3 ஆண்டுகள் வரை பணியாற்றலாம். இந்நிலையில், ஓபிடி திட்டத்தை ரத்து செய்யும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவை சேர்ந்த சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவி, மாணவியர் அமெரிக்காவில் கல்வி பயின்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் வலுக்கட்டாயமாக அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திட்டத்தால் வெளிநாட்டினருக்கே வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. அமெரிக்க இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி பரிதவிக்கின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவே இந்த முடிவு எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.