திமுக ஆட்சியில் 3 ஆண்டுகளில் 3 லட்சம் கோடி கடன் - சசிகலா குற்றச்சாட்டு

DMK V. K. Sasikala Tenkasi
By Karthikraja Jul 17, 2024 09:30 PM GMT
Report

 திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் தொகை உயர்ந்துள்ளதாக சசிகலா குற்றஞ்சாட்டியுள்ளார்.

சசிகலா

’அம்மாவின் வழியில் மக்கள் பயணம்’ என்ற பெயரில், வி.கே.சசிகலா இன்று முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலாவதாக, இன்று தென்காசியில் சென்றுள்ள அவர் மக்கள் முன் உரையாற்றினார். 

v.k.sasikala tenkasi speech

இதில் அவர் பேசியதாவது, மாண்புமிகு அம்மா ஜெயலலிதா ஆட்சியில் மாணவர்களுக்கு மிதி வண்டி மடிக்கணினி போன்றவற்றை வழங்கினார். மேலும் தமிழ்நாட்டில் இருந்து சென்று ராணுவத்தில் சேர்ந்து வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் நிதி வழங்கப்பட்டது. இது போன்ற பல திட்டங்கள் அம்மா ஆட்சியில் நிறைவேற்றப்பட்டன. 

வாய பொத்திட்டு இருக்கணுமா? டென்ஷனான சசிகலா - என்ன நடந்தது?

வாய பொத்திட்டு இருக்கணுமா? டென்ஷனான சசிகலா - என்ன நடந்தது?

திமுக ஆட்சி

ஆனால் 2011 ம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் 1,14,000 கோடி கடன் வைத்து விட்டு சென்றார். அம்மா ஆட்சியில் கடன் அதிகரித்தாலும் மக்களுக்காக அவர் பல திட்டங்களை செய்துள்ளார். இன்று திமுக மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ளது. ஆனால் மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை. 

v.k.sasikala latest

திமுக 2021 ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது 5,71,000 கோடி. தற்போது 2024 ல் கடன் 8,76,000 கோடியாக உயர்ந்துள்ளது. திமுகவின் 4 ஆண்டுகால ஆட்சியில் கடன் சுமை 3 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. ஆனால் மக்களுக்காக உருப்படியாக எதுவும் செய்யவில்லை. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும் 4 லட்ச ருபாய் கடனை ஏற்றியதே இவர்கள் செய்த காரியம்.

இதே போல் இவர்கள் ஆட்சி செய்தால் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும் 5 லட்சம், லட்சம் கடனை ஏற்றிக்கொண்டே செல்வார்கள். இவர்களால் ஒருபோதும் அம்மாவை போல் ஆட்சி செய்ய முடியாது. ஏனென்றால் இவர்களிடம் நிர்வாக திறன் இல்லை என பேசியுள்ளார்.