வெடிக்கும் கலவரம்; 3 பேர் உயிரோடு ஆம்புலன்ஸில் எரித்துக் கொலை - திடுக்கிடும் நிகழ்வுகள்
7 வயது சிறுவன் உட்பட 3 பேர் ஆம்புலன்ஸோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
வெடிக்கும் கலவரம்
மணிப்பூரில், பெரும்பான்மையாக இருக்கும் மைதேயி இன மக்கள், அரசிடம் தங்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து கோரிவருகின்றனர். ஆனால் அவர்களுக்கு அந்தஸ்து வழங்கினால் நாங்கள் பாதிக்கப்படுவோம் என குக்கி பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டம் பல இடங்களில் கலவரமாக மாறி, மாநிலமே வன்முறைக்காடானது. தொடர்ந்து, இணைய சேவையை முடக்கி, 10,000-க்கும் மேற்பட்ட அஸ்ஸாம் ரைஃபிள் படைப்பிரிவினர் மூலம் கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்றுவருகிறது.
எரித்துக் கொலை
இந்நிலையில், க்கியின மக்களின் முகாமில் துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் டோன்சிங் ஹாங்சிங் (7) என்ற சிறுவன்மீது குண்டு பாய்ந்தது. அதனால் அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தாய் மீனா ஹாங்சிங் (45), உறவினர் பெண் என ஆம்புலன்ஸில் புறப்பட்டுள்ளனர்.

அப்போது, இம்பாலின் புறநகர்ப் பகுதியில் 2,000 பேர் ஆம்புலன்ஸை வழி மறித்து, அதற்குத் தீவைத்திருக்கின்றனர். இதில் மூவரும் உடல் கருகி உயிரிழந்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.