மும்பை இந்தியன்ஸ் அணியில் விரிசல்? விரைவில் வெளியேறும் 3 ஜாம்பவான் வீரர்கள் !

Swetha
in கிரிக்கெட்Report this article
3 முக்கிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அணியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி
நடப்பாண்டின் ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி பல சர்ச்சையில் சிக்கி பல்வேறு பிரச்சனைகளில் இருந்து வந்தது. ரோகித் - ஹர்திக் இருவருக்கு இடையேயும் சரியான புரிதல் இல்லை என்றெல்லாம் செய்திகள் வெளியானது .தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் முதல் அணியாக எலிமினேட் ஆனது.
முன்னதாக ரோஹித் சர்மா ,மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருக்கும் அபிஷேக் நாயரை சந்தித்து தான் அணியில் இருந்து விலக உள்ளதாக அவர் குறிப்பிட்ட வீடியோ வெளியானது பெரும் சர்ச்சையானது.
இந்த நிலையில், 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன் 4 வீரர்களை மட்டுமே ஒரு அணி தக்க வைக்க முடியும். அந்த வகையில் பார்த்தால் மும்பை இந்தியன்ஸ் அணியில் நான்கு முக்கிய வீரர்களாக இருப்பவர்கள் ரோஹித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா.
3 ஜாம்பவான் வீரர்கள்
இதில் ரோஹித் சர்மா வேறு அணிக்கு செல்ல ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து பும்ரா அந்த அணியின் முக்கியமான பந்துவீச்சாளர் ஆவார். அவரது சம்பளம் 12 கோடி மட்டுமே. உலகின் முக்கிய வேகப் பந்துவீச்சாளரான இவருக்கு மிக குறைவான சம்பளம் அளிக்கப்படுகிறது.
ரோஹித் சர்மாவுக்கு அடுத்து கேப்டனாக பும்ரா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது அவருக்கு அதிருப்தி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல சூர்யகுமார் யாதவுக்கு 8 கோடி மட்டுமே சம்பளம்.
டி20யில் நம்பர் 1 பேட்ஸ்மேன் ஆன இவருக்கும் குறைவான சம்பளம் என்பதால் ஏலத்தில் பங்கேற்று அதிக சம்பளம் பெற விரும்புவார் எனக் கூறப்படுகிறது. எனவே இந்தியன்ஸ் அணி 3 முக்கிய வீரர்களை இழக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.