இன்ஸ்டா காதலனை சந்திக்க ரயில் ஏறி கேரளா சென்ற 3 சிறுமிகள் - வாலிபர் செய்த காரியம்!
இன்ஸ்டாகிராம் காதலனை சந்திக்க ஒரு சிறுவன் உட்பட 3 சிறுமிகள் ரயில் ஏறி கேரளா சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் காதலன்
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி இன்ஸ்டாகிராமில் வாலிபர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் அந்த சிறுமி தனது சகோதரர் மற்றும் 2 தோழிகளுடன் கம்யூட்டர் சென்டருக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த சிறுமி கம்யூட்டர் சென்டருக்கு செல்லாமல், தனது தோழிகள் மற்றும் சகோதரருடன் அந்த வாலிபரை சந்திக்க ரயில் ஏறி கேரளா சென்றுள்ளார். அப்போது சிறுமியை அவரது காதலன் நேரில் கண்டு நிராகரித்ததாக கூறப்படுகிறது.
பரபரப்பு சம்பவம்
இதனால் விரக்தியடைந்த சிறுமி உட்பட 4 பேரும் செய்வதறியாது திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் நின்றுள்ளனர். இதனையடுத்து தனியாக நின்றுகொண்டிருந்த நால்வரையும் பிடித்து ரயில்வே போலீசார் விசாரித்ததுள்ளனர்.
அவர்கள் சொல்வதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அனைவரையும் மீட்டு பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.