Brand ஆன முட்டை விற்பனை; வங்கி கணக்கு 0 - ரூ.100 கோடி லாபம் -நண்பர்களின் வெற்றி கதை!
3 நண்பர்கள் தொடங்கிய முட்டை வியாபாரம், ஒரு பிராண்டாக உருவாகி தற்போது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக மாற்றியுள்ளனர்.
முட்டை விற்பனை
பீகார் மாநிலத்தை சேர்ந்த 3 நண்பர்களான சேர்ந்த அபிஷேக் நெகி, உத்தம் குமார் , ஆதித்யா குமார் ஆகியோர் இனணந்து தொடங்கிய நிறுவனம் தான் EGGOZ நிறுவனம். இயற்கையான தீவனங்களை அளித்து வளர்க்கப்படும் கோழிகள் இடும் முட்டைகளை இந்நிறுவனம் விற்பனை செய்கிறது.
நாள் ஒன்றில் 4 லட்சம் முட்டைகள் வரை விற்பனையாகி கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டப்படுகிறது. சமீபத்தில் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான அபிஷேக் நெகி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், தங்களுடைய தொழிலை எப்படி தொடங்கினோம் என்பது குறித்த தகவல்களை பகிர்ந்திருந்தார்.
இந்தியாவில் முட்டைகளுக்கான தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது, குறிப்பாக ஒவ்வொரு 8 ஆண்டுகளிலும் இந்தியாவில் முட்டை நுக்ர்வு இரண்டு மடங்குகளாக இருக்கிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், முட்டை சார்ந்த தொழிலுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பது என்பதால் நண்பர்களோடு இணைந்து இந்நிறுவனத்தை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார்.
ரூ.100 கோடி லாபம்
பால் பொருட்கள் என்றால் எல்லாருக்கும் எப்படி அமுல் ஞாபகத்திற்கு வருகிறதோ, அதேபோல முட்டை என்றவுடன் அனைவருக்கும் EGGOZ என்ற பெயர் தான் ஞாபகத்திற்கு வர வேண்டும் என்ற நோக்கத்திலேயே தாங்கள் சந்தைப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இவர்களிடம் கிடைக்கும் முட்டையில் மஞ்சள் கருவிற்கு பதிலாக ஆரஞ்சு நிற கரு இருக்கிறதாம். இந்த நிற கருவின் ஊட்டச்சத்துகளை விடவும் மஞ்சக்கருவில் அதிகம் இருப்பதால் இதற்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு மூவரும் சேர்ந்து முதன்முதலில் பிஹார் மாநிலத்தில் கோழி பண்ணை ஒன்றை தொடங்கினர். ஆனால், எதிர்பாராத விதமாக கொரோனா தொற்று தாக்கத்தில் அனைவரை போலவே இவர்களும் பல்வேறு சவால்களை சந்திக்க நேர்ந்தது. ஒரு கட்டத்தில் வங்கி கணக்கு பூஜ்யம் என்றானதாம்.ஆனால் அவற்றை எல்லாம் மாற்றியமைத்து தற்போது 100 கோடி ரூபாய் வரை லாபம் பெரும் நிறுவனமாக மாற்றியுள்ளனர்.