சார்லஸ் மன்னர் மீது முட்டை வீச்சு - நூதன தண்டனை இதுதானாம்..!
மன்னர் சார்லஸ் மீது முட்டைகளை வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முட்டை வீச்சு
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் சிலையை திறக்க மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா யார்ஷயர் நகரம் சென்றனர். அவர்களது வருக்கைக்காக மிக்லேகேட் பாரில் தற்காலிக வேலி அமைக்கப்பட்டிருந்தது.
அதற்குப்பின்னால் கூட்டத்தில் இருந்த 23 வயது இளைஞர் ஒருவர், இந்த நாடு அடிமைகளின் இரத்தத்தால் கட்டப்பட்டது என கூறியப்படி சார்லஸ் மீது மூன்று முட்டைகளை வீசினார். ஆனால் எதுவும் அவர்மீது படவில்லை. உடனே அங்கிருந்த காவல்துறையினர் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர்.
நூதன தண்டனை
இந்நிலையில், அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு பொது இடங்களில் முட்டைகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மன்னர் சார்லஸ் இடமிருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கையில், ஒரு கும்பல் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக தான் அவ்வாறு செய்தேன். தான் செய்த அந்த தவறுக்குப்பின் தனக்கு கொலை மிரட்டல் வருகிறது என தெரிவித்துள்ளார். விசாரணையில், இவர் பல்கலைக்கழக மாணவர் பேட்ரிக் என்பது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.