கடலில் விழுந்த விமானம்; உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன? - வைரலாகும் வீடியோ
ஆஸ்திரேலியாவில் விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
விமான விபத்து
ஆஸ்திரேலியாவின் மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் உள்ள ரோட்னெஸ்ட் தீவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சிறிய ரக விமானம் மூலம் வருகை தருவார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம்(07.01.2024) மதியம் அங்கிருந்து, அம்மாநில தலைநகர் பெர்த்திற்கு கிளம்பிய ஸ்வான் ரிவர் சீப்ளேன்ஸுக்குச் சொந்தமான செஸ்னா 208 கேரவன் எனும் சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
3 பேர் பலி
இந்த விமானத்தில் 7 பேர் பயணித்துள்ள நிலையில், 65 வயதான சுவிஸ் பெண், 60 வயதான டேனிஷ் நபர் மற்றும் பெர்த்தை சேர்ந்த 34 வயதான விமானி ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். உயிர் பிழைத்த 4 பேரில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விமான விபத்தின் காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தீவின் மேற்குப் பகுதியில் உள்ள விரிகுடாவின் நுழைவாயிலின் பாறையில் விமானம் மோதியிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Australia Plane Crash: Three Dead in Sea Plane Crash
— Finance Normad (@FinanceNormad) January 8, 2025
In a tragic incident, three people have been seriously injured, and three others are missing.
Police said the crash occurred during take-off from Rottnest Island.#PlaneCrash #PlaneCrashespic.twitter.com/m3DbuTLaQc
உயிரிழந்தவர்களின் உடல்களை காவல் துறை நீச்சல் வீரர்கள் 26 அடி ஆழத்திற்கு நீந்தி சென்று மீட்டனர். மேலும் கடலில் விழுந்த விமானங்களின் பாகங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்களான விமானம் கடலில் விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.