திடீரென இடிந்த சுவர்; சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழப்பு - அதிகாலையிலேயே சோகம்
சுவர் இடிந்து மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இடிந்த விழுந்த சுவர்
மதுரை திருப்பரங்குன்றம் அருகே வளையன் குளம் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அம்மா பிள்ளை (65).
இவரது பேரன் வீரமணி (10) மற்றும் பக்கத்துவீட்டு பெண் வெங்கட்டி (55) என்பவர் இரவு ஏழு மணி அளவில் வீடு வாசலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது மழை பெய்து கொண்டிருந்தபோது திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் வெங்கட்டி மற்றும் அம்மா பிள்ளை அவரது பேரன் வீரமணி ஆகியோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மூவர் பலி
அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கட்டி உயிரிழந்தார். தொடர்ந்து வீரமணி உட்பட இருவர் சிகிச்சை பலனில்லாமல் இன்று காலை அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வந்த நிலையில், பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் முடக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.