டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை - எப்போதெல்லாம் தெரியுமா?
3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவிழா
கன்னியாகுமரி, நாகர்கோவில் சவேரியார் ஆலய வருடாந்திர விழா கொண்டாடப்படவுள்ளது. 3 நாட்கள் தொடரும் இந்த விழாவில் பல மாவட்டங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதனை முன்னிட்டு அந்த வட்டாரத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான பார்கள், சொகுசு ஹோட்டல் பார்கள் இன்று (டிசம்பர் 1ம் தேதி) முதல் டிசம்பர் 3ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மூடல்
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள உத்தரவில், நாகர்கோவில் ரயில்வே ரோடு, கோட்டார் சந்திப்பு, பாறைக்கால் மடையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் டிசம்பர் 3ம் தேதி வரை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீறி கடையை திறந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.