2வதும் பெண் குழந்தை - 3 நாள் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தாய்!
இரண்டாவதும் பெண் குழந்தை என்பதால் அதனை தாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் குழந்தை
மகாராஷ்டிரா, உஸ்மானாபாத்தில் ஹோலி எனும் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான பெண். இவருக்கு காசர் ஜவாலா கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே பெண் குழந்தை இருந்த நிலையில் 2-வது குழந்தையும் பெண்குழந்தையாக பிறந்ததால் மனமுடைந்த அந்த பெண்,
கைக்குட்டையால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். குழந்தை இறந்ததையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை செய்து வந்தனர்.
தாய் கொடூரம்
இதற்கிடையில் குழந்தையின் தாயார் தான் ஒன்றும் செய்யாதது போல மிகவும் இயல்பாக இருந்துள்ளார். இதையடுத்து போலீசாரின் தீவிர விசாரணையில் தாயே குழந்தையைக் கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.