பெண் குழந்தை பெற்றெடுத்த பிரபல ஜோடி - குவியும் வாழ்த்து!
நடிகை ஆலியா பட் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
ஆலியா- ரன்பிர்
பிரபல பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரும், நடிகை ஆலியா பட்டும் பிரம்மாஸ்திரா படத்தில் சேர்ந்து நடித்தார்கள். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. 5 வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் மும்பையில் திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணமான இரண்டு மாதத்தில் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூல வலைதள பக்கங்களில் அறிவித்தார் ஆலியா. அதற்கு பல பேர் கிண்டலாக கமெண்ட் செய்து வந்தனர். எதற்கும் செவி சாய்க்காமல் திருமணத்திற்கு பிறகும் நடித்து வந்தார்.
பெண் குழந்தை
இந்நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆலியா அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து இரு வீட்டாரும் விரைந்தனர். தற்போது பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதனைப் பகிர்ந்த ஆலியா,
எங்களது வாழ்க்கையின் முக்கியமான செய்தி இதுதான். எங்களது குழந்தை கைகளில்..அழகான பெண் குழந்தை அவள். ஆசிர்வதிக்கப்பட்ட அன்பான பெற்றோராக மாறியிருக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு திரையுலகத்தினரும், ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.