கடலில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் உயிரிழப்பு - 2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு!

M. K. Stalin M. Appavu Death Tirunelveli
By Vinothini Aug 17, 2023 04:41 AM GMT
Report

சிறுவர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலுக்கு சென்ற சிறுவர்கள்

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள கடற்கரை கிராமமான நவ்வலடியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் முகேஷ் (13), இசக்கியப்பன் மகன் ராகுல் (12) , வள்ளிமுத்து மகன் ஆகாஸ் (13) மற்றும் பிரகாஷ் ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் மாலையில் கடலில் குளிக்க சென்றுள்ளனர்.

3-children-died-while-bathing-in-sea

அப்பொழுது எதிர்பாராதவிதமாக கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டனர். அதில் பிரகாஷ் என்ற சிறுவர் மட்டும் கடலில் தத்தளித்து வந்து சேர்ந்தார். மற்ற 3 பெரும் கடலில் மூழ்கி மாயமனானர்கள், தப்பி சென்ற சிறுவர் ஊர் மக்களை அழைத்து வந்தார். பதறியடித்து வந்த கிராம மக்கள் கடலுக்குள் சென்று தேட தொடங்கினர்.

உயிரிழப்பு

இந்நிலையில், உவரி போலீஸார், தீயணைப்பு படையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினரும் தேடும் பணியில் ஈடுபட்டனர். சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு இரவோடு இரவாக அங்குவந்து தேடும் பணியை தீவிரப்படுத்தினர். இரவு முழுவதும் தேடியும் சிறுவர்கள் கிடைக்கவில்லை, நேற்று அதிகாலையில் 3 மாணவர்களின் சடலங்கள் கோடாவிளை அருகே கரை ஒதுங்கின.

3-children-died-while-bathing-in-sea

தொடர்ந்து, அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை அந்த சிறுவர்கள் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், உயிரிழந்த 3 பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். நிவாரணத் தொகையை சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று மாலை வழங்கினார்.