வீடியோ மோகத்தால் நடந்த விபரீதம் - இலங்கை தமிழர்கள் 3 பேர் உயிரிழப்பு..!

Accident Death
By Vinothini May 22, 2023 11:43 AM GMT
Report

திருவள்ளூரில் 3 இளைஞர்கள் பைக்கில் செல்வதை வீடியோ எடுத்துகொண்டே சென்று பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் பகுதியில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

3-boys-died-in-accident-while-driving-bike

இதில் 3 இளைஞர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் தாங்கள் பைக்கில் செல்வதை வீடியோ எடுத்தபடி சென்றதாக கூறப்படுகிறது.

இதில் ஒருகட்டத்தில் இவர்களுக்கு முன்னே சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளனர்.

அப்பொழுது அந்த லாரியில் மோதி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

விசாரணை

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டனர். பின்னர் விசாரணை நடத்தியதில், அவர்கள் மூவரும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.

3-boys-died-in-accident-while-driving-bike

அந்த மூன்று இளைஞர்கள், 19 வயதே ஆன தயாளன் , சார்லஸ் 21 வயது, ஜான் 20 வயது என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றிய போலீசார் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.