செவ்வாய் கிரகத்தில் கடற்கரை கண்டுபிடிப்பு - அதுவும் 300 கோடி ஆண்டுகள் பழசாம்..
செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகம்
நாம் வாழும் பூமிக்கு அடுத்தபடியாக இருப்பது செவ்வாய். இதில், கடந்த 2018ல் செவ்வாய் கிரகத்தில் கியூரியா சிட்டி விண்கலத்தை இறக்கி அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா ஆய்வு மேற்கொண்டது.
அதில், செவ்வாய் கிரகத்தில் 30 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய கரிமப் பொருள், அடுத்த 20 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.
கடற்கரை கண்டுபிடிப்பு
தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், அங்கு பூமத்திய ரேகைக்கு அடியில் தூசி நிறைந்த பனிக்கட்டிகள் இருப்பதை கண்டுபிடித்து தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது.
இந்நிலையில், சீன விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ஜூராங் ரோவர் கருவி, அங்கு 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை படிமங்களை கண்டுபிடித்துள்ளது. இந்த தகவல் தண்ணீர் இருப்பதை மேலும் உறுதியாக்கியுள்ளது.