வீடியோ கேமில் மூழ்கிய தந்தை - வெப்பத்தில் துடிதுடித்து இறந்த 2 வயது குழந்தை

United States of America
By Karthikraja Aug 03, 2024 01:30 PM GMT
Report

தந்தையின் வீடியோ கேம் மோகத்தால் 2 வயது குழந்தை இறந்துள்ளது.

2வயது பெண் குழந்தை

தந்தை வீடியோ கேமில் மூழ்கியதால் 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா அரிசோனா மாகாணத்தில் வெளியே சென்றிருந்த தாய் வீட்டுக்கு வந்து பார்த்த போது குழந்தை காரில் பேச்சு மூச்சின்றி இருந்துள்ளது. 

arizona baby death in car

உடனே குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. பிரதே பரிசோதனையில் குழந்தை 42.7 டிகிரி செல்சியஸ் வெப்பத்தால் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. 

ஆன்லைன் கேமில் வந்த டாஸ்க் - 14 வது மடியில் இருந்து குதித்த சிறுவன்

ஆன்லைன் கேமில் வந்த டாஸ்க் - 14 வது மடியில் இருந்து குதித்த சிறுவன்

விசாரணை

 இது தொடர்பாக நடத்திய விசாரணையில், குழந்தையின் தந்தை கிறிஸ்டோபர் தனது 2 வயது பெண் குழந்தையுடன் காரில் வெளியே சென்று விட்டு மதியம் 12;30 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். குழந்தை காரில் பின் சீட்டில் தூங்கி கொண்டிருந்ததால் அப்படியே குழந்தையை தூங்க விட்டு வீட்டிற்கு சென்று கேம் விளையாடுவதில் மூழ்கி விட்டார். 4:30 மணிக்கு குழந்தையின் தாய் வீட்டுக்கு திரும்பியதும், குழந்தை காரில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். 

arizona father arrested

இது பற்றி கணவரிடம் கேட்ட போது, காரில் ஏசி ஆன் செய்து இருந்ததால் தான் குழந்தையை தூங்க விட்டு வந்தாக தெரிவித்துள்ளார். ஆனால் காரில் உள்ள ஏசி 30 நிமிடங்களில் ஆட்டோமேட்டிக்காக ஆஃப் ஆகி விடும் என்பதை மறந்து விட்டார். தற்போது கொலை மற்றும் குழந்தைகள் வன்கொடுமை பிரிவில் கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.