சென்னை அருகே 2-வது புதிய விமான நிலையம் எங்கு அமைகிறதுன்னு தெரியுமா? - இதோ வெளியான தகவல்
மீனம்பாக்கம் விமான நிலையம்
சென்னையில் விமான பயணத்தை அதிகம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதனால் இன்னொரு விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், சென்னை அருகே புறநகர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
சென்னையில் 2-வது விமான நிலையம்
இந்நிலையில், இன்று நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், சென்னையை அடுத்த பந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த பரந்தூர் மற்றும் பன்னூரில், ஏதாவது ஓரிடத்தில், 2-வது விமான நிலையத்தை அமைக்கலாம் என தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது.
இதனையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பந்தூர் என்ற இடத்தில், சென்னையின் 2-வது விமான நிலையம் அமைகிறது என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி சோமு கேள்வி எழுப்பியதில், மத்திய சிவில் விமான போக்குவரத்து இணையமைச்சர் வி.கே.சிங் பதில் அளித்தார்.