ஒரே உடம்பில் துடிக்கும் 2 இதயங்கள்; திக் திக் நிமிடங்கள்..மருத்துவர்கள் படைத்த சாதனை!

Tamil nadu Coimbatore
By Swetha Aug 19, 2024 04:04 AM GMT
Report

சிக்கலான இருதய அறுவைச் சிகிச்சையை மருத்துவர்களின் சாதனை படைத்துள்ளனர்.

ஒரே உடம்பில்..

இரண்டு இதயங்கள் உடன் வாழ்ந்து வந்த நபருக்கு வெற்றிகரமாக இருதய அறுவைச் சிகிச்சையை மருத்துவர்கள் நடத்தி சாதனை படைத்துள்ளனர். கோவையில் KMCH மருத்துவமனையில் நடந்த இந்த இதய அறுவை சிகிச்சையில் இரண்டு இதயங்களை ஒரே நேரத்தில்

ஒரே உடம்பில் துடிக்கும் 2 இதயங்கள்; திக் திக் நிமிடங்கள்..மருத்துவர்கள் படைத்த சாதனை! | 2Hearts In 1 Body Undergone Successful Transplant

துடிக்க வைத்து அசத்தியவர் கோவையைச் சேர்ந்த டாக்டர் பிரசாந்த் வஜ்யநாத். இந்த அற்புதத்தை நிகழ்த்தி அந்த நபரின் உயிரைக் காப்பாற்றியது அவருக்கும், அவர் குடும்பத்திற்கும் பேரின்பத்தை அளித்துள்ளது.

இந்த சம்பவத்தால் சாதனை படைத்த மருத்துவருக்கு மேலும் பெருமை சேர்ந்துள்ளது எனலாம். இது குறித்து டாக்டர் பிரசாந்த் விஜயநாத் பேசுகையில், “நான் KMCH மருத்துவமனையில் கார்டியோ பிளாஸ்டிக் சர்ஜரியின் இயக்குநராகவும் தலைவராகவும் இருக்கிறேன்.

ஓராண்டாக இருதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்த 48 வயதான நோயாளி எங்கள் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வந்தார். பலமுறை மாரடைப்பு ஏற்பட்ட அவருக்கு ஸ்டெண்டும் வைக்கப்பட்டு இருந்தது.

801 கிராம் எடை கொண்ட மிகப்பெரிய சிறுநீரக கல் - இலங்கை மருத்துவர்கள் உலக சாதனை!

801 கிராம் எடை கொண்ட மிகப்பெரிய சிறுநீரக கல் - இலங்கை மருத்துவர்கள் உலக சாதனை!

2 இதயங்கள்

இருப்பினும் அவரது இருதயத்தின் செயல்பாடு குறைவாக இருந்த காரணத்தினால் அன்றாடப் பணிகளைக் கூட அவரால் மேற்கொள்ள முடியாமல் இருந்தது. இதனால் இதய, நுரையீரல் மாற்றுச் சிகிச்சைக்காக விண்ணப்பித்திருந்தார்.

ஒரே உடம்பில் துடிக்கும் 2 இதயங்கள்; திக் திக் நிமிடங்கள்..மருத்துவர்கள் படைத்த சாதனை! | 2Hearts In 1 Body Undergone Successful Transplant

இந்நிலையில் அவருக்கு உடல் உறுப்பு மாற்று ஆணையத்தின் மூலம் இதயம் மட்டும் கிடைத்தது. இதனால் நோயாளியின் இதயம் மற்றும் கொடையாளரின் இதயம் என இரண்டையும் இணைத்து நுரையீரலின் அழுத்தத்தையும் சேர்த்து ஈடு செய்ய முடியும் என கண்டறிந்து ஹெட்டோரோடோபிக் சிகிச்சை செய்யத் தீர்மானித்தோம்.

மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையின் முடிவில் அவருக்கு இதயம் வெற்றிகரமாகப் பொருத்தி கருவி உதவியுடன் 2 இதயங்களையும் சீராகத் துடிக்க வைத்தோம். தற்போது அந்த நோயாளி நலமாக மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பும் 2017ஆம் ஆண்டும் இதுபோன்ற ஒரு சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தோம். முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இந்த சிகிச்சைக்கு நோயாளி பயனடையும் வகையில் ரூ.15 லட்சம் வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.