801 கிராம் எடை கொண்ட மிகப்பெரிய சிறுநீரக கல் - இலங்கை மருத்துவர்கள் உலக சாதனை!

Sri Lanka Guinness World Records
By Vinothini Jun 15, 2023 10:52 AM GMT
Report

உலகின் மிக பெரிய சிறுநீரக கல்லை சிகிச்சையில் எடுத்து இலங்கை மருத்துவர்கள் உலக சாதனை படைத்துள்ளார்.

சிகிச்சை

கொழும்புவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ஒருவருக்கு சிறுநீரக கல் அடைப்பு இருந்துள்ளது. இதனை ராணுவ மருத்துவமனையின் சிறுநீரகத்துறை தலைவர் டாக்டர் கே.சுதர்சன் தலைமையில், டாக்டர் பதிரத்னா மற்றும் டாக்டர் தமஷா பிரேமதிலகா ஆகியோர் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

srilanka-doctor-removed-world-largest-kidney-stone

அப்பொழுது அந்த நோயாளியிடம் இருந்து அகற்றப்பட்ட கல், 13.372 சென்டி மீட்டர் நீளமும், 801 கிராம் எடையும் கொண்டதாக இருந்தது என ராணுவம் தெரிவித்துள்ளது.

சாதனை

இந்நிலையில், கின்னஸ் உலக சாதனை பட்டியலில், இதுவரை அகற்றப்பட்ட கற்களிலேயே, இந்தியாவில் 2004ம் வருடம் அகற்றப்பட்ட 13 சென்டி மீட்டர் நீளம் கொண்ட கல்தான் பெரியதாக பட்டியலிடப்பட்டிருந்தது.

srilanka-doctor-removed-world-largest-kidney-stone

அதே போன்று, மிக அதிக எடையுள்ள கல் என 2008ம் வருடம் பாகிஸ்தானில் அகற்றப்பட்ட 620 கிராம் கல் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது, கடந்த 1-ம் தேதி இலங்கையைச் சேர்ந்த கேனிஸ்டஸ் கூங்கே என்பவரின் சிறுநீரகத்திலிருந்து 13.372 சென்டிமீட்டர் (5.264 இஞ்ச்) உள்ள ஒரு சிறுநீரக கல் அகற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனவே இது உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளது.