4 பயணக் கைதிகளை மீட்க.. இஸ்ரேல் கொடூர தாக்குதல் - 274 பாலஸ்தீனர்கள் பலி!
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 274 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதல்
ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டுள்ளது. இந்த அமைப்பு கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடி கொடுப்பதாக கூறி 200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. இதில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து, இஸ்ரேல் பாதுகாப்புப்படை, ராஃபா எல்லையில் அகதிகள் முகாமில் தாக்குதல் நடத்தியது. இதில், 45 பேர் பலியாகினர். இந்நிலையில், 4 பணயக் கைதிகளை மீட்பதற்காக பகல் நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 274 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும்,
274 பேர் பலி
சுமார் 700 பேர் காயமடைந்ததாகவும், காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஏற்கனவே வந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க ஏற்கனவே போராடிக்கொண்டிருக்கும் நிலையில்,
மேலும் நோயாளிகள் வந்ததால் நிலைமை மோசமாகியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது, இஸ்ரேல் படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் மிகப்பெரிய அளவில் பதிலடி கொடுக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.