மீண்டும்.. மீண்டும் அரங்கேறும் சோகம் - கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் உயிரிழப்பு!

India Bihar Death
By Swetha Oct 17, 2024 10:00 AM GMT
Report

கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழப்பு

பீகார் மாநிலத்தின் சிவான் பகுதியில் விஷசாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதை வாங்கி குடித்த 20 க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா். கடந்த 2 நாட்களுக்கு முன்பே அவர்கள் விஷசாராயத்தை வாங்கி பருகி உள்ளதாக தெரியவந்துள்ளது.

மீண்டும்.. மீண்டும் அரங்கேறும் சோகம் - கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் உயிரிழப்பு! | 27 Died Consuming Illicit Liqour In Bihar

ஆனால் அதனை பருகி 3 நாட்கள் கழித்து தான் உயிரிழப்புகள் ஏற்பட தொடங்கி உள்ளது. இந்த விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை குழு கொண்டு விசாரணை நடத்தப்படுகிறது. 24 மணிநேரத்தில் குறைந்தது 27 பேர் கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

மது - கள்ளச்சாராயம் வித்தியாசம் என்ன! மக்கள் ஏன் இந்த கள்ளச்சாராயத்தை தேடுகிறார்கள்?

மது - கள்ளச்சாராயம் வித்தியாசம் என்ன! மக்கள் ஏன் இந்த கள்ளச்சாராயத்தை தேடுகிறார்கள்?

கள்ளச்சாராயம் 

இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 49 பேர் கள்ளச்சாராயம் குடித்துக் கடும் உடல்நலக் குறைவுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும்.. மீண்டும் அரங்கேறும் சோகம் - கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் உயிரிழப்பு! | 27 Died Consuming Illicit Liqour In Bihar

சிவானில் 29 பேரும், சாரனில் 10 பேரும் பரிதாப நிலையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ஒருவரை பீகார் மருத்துவக் கல்லூரிக்கு (PMCH) மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மகார்பூர் கிராமத்தில், பலர் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வயிற்றுவலி, வாந்தி, மயக்கம் போன்ற உடல்நலக் குறைபாடுகளால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 27 பேர் இதுவரை இறந்துள்ளனர். எனினும், அவர்களின் பெயர்களை அரசு இன்னும் வெளியிடவில்லை என்பது தெரியவந்துள்ளது.