பெண்ணின் கண்ணில் அசௌகரியம்.. சிக்கிய 27 கான்டாக்ட் லென்ஸ்கள் - அதிர்ச்சி சம்பவம்!
பெண்ணின் கண்ணில் 27 கான்டாக்ட் லென்ஸ்கள் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
லென்ஸ்கள்
பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒரு பெண் 35 ஆண்டுகளாக மாதாந்திர டிஸ்போசபிள் லென்ஸ்கள் பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால் தொடர்ந்து அவரது கண்களை பரிசோதித்து வந்துள்ளார். எனினும் அவரது வலது கண்ணில் புரை விழுந்ததாக மருத்துவரை அணுகியுள்ளார்.
கண்ணை பரிசோதித்த மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில், கண்புரை அறுவை சிகிச்சைக்கு முன், அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்தார். அப்போது அவளுடைய மேல் கண்ணிமைக்குக் கீழே ஒரு பெரிய, நீல நிறக் கட்டியை கவனித்தார்.
கட்டியை பரிசோதித்தபோது, அங்கே ஒட்டியிருந்த 17 கான்டாக்ட் லென்ஸ்கள் மூட்டையாக இருந்தது தெரிய வந்தது. பின்னர் அறுவை சிகிச்சை செய்து 10 காண்டாக்ட் லென்ஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் என்ன அதிசயம் என்றால்..
இத்தனை கான்டாக்ட் லென்ஸ்கள் இருந்தும் அந்தப் பெண் எந்தவிதமான பிரச்சனையும் உணரவில்லை. அந்த பெண்ணிற்கு லேசான அசௌகரியம் மற்றும் கண்களில் வறட்சி மட்டுமே இருந்துள்ளது. வயது மற்றும் உலர் கண் காரணமாக இருக்கலாம் என அந்த பெண் புறக்கணித்து வந்துள்ளார்.
கண்
மருத்துவர்கள் கண்களில் இருந்த காண்டாக்ட் லென்ஸ்களை அகற்றிய பிறகு, தொற்று அபாயம் காரணமாக மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். கான்டாக்ட் லென்ஸ்கள் நீண்ட காலம் கண்ணில் இருந்தால்,
கண்ணில் பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்பதால், அவர்கள் சிகிச்சையை ஒத்தி வைத்தனர். இது குறித்து பேசிய அந்த பெண், கண்ணில் இருந்து லென்ஸ் விழுந்துவிட்டதாக பலமுறை உணர்ந்ததாக கூறிய பாதிக்கப்பட்ட பெண்,
உண்மையில் அது கண்ணில் இருந்ததை தான் உணரவில்லை என தெரிவித்துள்ளார். இது பற்றி பேசிய மருத்துவர்கள், பெண்ணின் 'கண் அமைப்பு' காரணமாக, கண் இமைகளுக்குக் கீழே லென்ஸ்கள் சிக்கிக் கொண்டதாக கூறினர்.
மேலும், காண்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்கவில்லை என்றால், அது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அறிவுறுத்தினர்