26 வயதில் 22 குழந்தைகளுக்கு தாய்.. அது எப்படி? கணக்கு இடிக்குதே - ஷாக் கொடுத்த இளம்பெண்!
இளம்பெண் ஒருவர் 26 வயதில் 22 குழந்தைகளுக்கு தாயானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
22 குழந்தைகள்
இந்த காலத்தில், ஒரு குழந்தைக்கே பலர் கஷ்டப்படுகின்றனர். ஏகப்பட்ட கருத்தரிப்பு மையங்கள் வந்துவிட்டது. இந்த நிலையில் ஜார்ஜியா நாட்டில், 26 வயதான இளம்பெண் ஒருவர் 22 குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜார்ஜியாவில், ரஷ்யாவைச் சேர்ந்த கிறிஸ்டினா ஓஸ்டுர்க் என்ற 26 வயது பெண் வசித்து வருகிறார்.
இவரது கணவர் 58 வயதான காலிப் ஓஸ்டுர்க், இவர் கோடீஸ்வரர், பல ஓட்டல்களை நடத்தி வருகிறார். கிரிஸ்டினாவுக்கு 105 குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும் என்ற வித்தியாசமான ஆசை வந்தது.
இதற்கு அவரது கணவரும் சம்மதித்து விட்டார். இவர்களுக்கு முதலில் பிறந்த குழந்தைக்கு தற்பொழுது 9 வயது ஆகிறது, அவர் மட்டுமே இருவருக்கும் நேரடியாக பிறந்த குழந்தை.

இன்னும் மனசு வலிக்குது, ஆனால் இது என் கடமை.. போரில் குடும்பத்தை இழந்த செய்தியாளரின் நெகிழ்ச்சி சம்பவம்!
இளம்பெண் பேட்டி
இந்நிலையில், மற்ற குழந்தைகள் அனைவரும் வாடகை தாய் மூலமாக பிறந்தனர். தற்பொழுது கிரிஸ்டினா 22 குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். இவர் தனது 22 குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் குழந்தைகளின் பெயர் வயது குறித்து குழந்தைகளே கூறுகிறார்கள். இது குறித்து அவர் கூறுகையில், "எனக்கு 26 வயதில் 22 குழந்தைகள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் வாடகைத் தாய் மூலம் ஒரு வருட இடைவெளியில் பிறந்தவர்கள் - எனக்கு 100 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள ஆசை.
100 குழந்தைகளை தாண்டினால், குழந்தை பெற்றுக்கொள்வதை நிறுத்துவேன், அதுவரை நிறுத்த மாட்டேன்" என்று கூறியுள்ளார்.