மாரடைப்பில் 25 வயது புது மாப்பிள்ளை மரணம் - ஷாக்கில் மாடியில் இருந்து விழுந்து இறந்த மனைவி!
25 வயது இளைஞர் மாரடைப்பினால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்பு
அபிஷேக் மற்றும் அஞ்சலி தம்பதி 3 மாதத்திற்கு முன் திருமணம் செய்தனர். இருவரும் டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவை பார்வையிட சென்றுள்ளனர். அப்போது திடீரென அபிஷேக்-கிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
உடனே அவரது மனைவி அவரின் நண்பர்களுடன் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அபிஷேக் உயிரிழந்தார். தொடர்ந்து, மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கனவனுக்காக உயிரைவிட்ட மனைவி
அதன்பின், அவரது உடல், காஜியாபாத்தில் உள்ள அவர்களின் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், அவரின் உடலைப் பார்த்து மனைவி அழுதுக்கொண்டே திடீரென ஓடி 7-வது மாடியில் இருந்து குதித்துள்ளார்.
பலத்த காயங்களுடன் அஞ்சலியை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.