அவர் தான் வேணும்னு ஒரே அடம்.. அப்பா வயது நபரை காதலித்து மணந்த 24 வயது பெண் - ஷாக் சம்பவம்!

Marriage Salem
By Vinothini Sep 14, 2023 06:40 AM GMT
Report

இளம்பெண் ஒருவர் தனது அப்பா வயது நபரை காதலித்து திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல்

சேலம் மாவட்டம், மாட்டையாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் 54 வயதான இவர் அந்தப் பகுதியில் விசைத்தறி தொழில் செய்துவருகிறார். இவருக்கு திருமணமாகி 24 வயதில் ஒரு மகன் உள்ளார். இவரது மனைவியிடம் ஏதோ தகராறு காரணமாக அவரை பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறார்.

24-year-old-woman-married-54-aged-man

அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த விமலா(24), கிருஷ்ணன் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவந்துள்ளார். இதில் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது, அந்த இளம்பெண் அவரை திருமணம் செய்வதற்காக கேட்டுள்ளார், அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார்.

திருமணம்

இந்நிலையில் , இருவரும் திருவண்ணாமலை கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். இதனை அறிந்த விமலாவின் பெற்றோர், சேலம் மாவட்டம், தாரமங்கலம் காவல்நிலையத்தில் தங்களது மகள் காணவில்லை என்றும், கிருஷ்ணன்தான் அவரை கடத்திச் சென்றுவிட்டதாகவும் புகார் அளித்தனர்.

24-year-old-woman-married-54-aged-man

இதனை தொடர்ந்து போலீசார், இவர்கள் இருவரையும் வரவழைத்தனர், அப்பொழுது விமலாவிடம் அவரது பெற்றோர் தங்களுடன் வருமாறும், வேறு ஒரு நபருடன் திருமணம் செய்து வைப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால், விமலா தனது காதலில் உறுதியாக இருந்து கிருஷ்ணனுடனே வாழ்வதாக தெரிவித்தார். மேலும், அவர் மேஜர் என்பதால் அவரது முடிவை தான் ஏற்கமுடியும் என்று அவரது பெற்றோரிடம் கூறி அனுப்பி வைத்தனர்.