திருமண வரவேற்பு விழாவில் நடனம் - மயங்கி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு!

Karnataka Marriage Death
By Sumathi 5 நாட்கள் முன்

திருமண வரவேற்பு விழாவில் இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி சம்பவம்

கர்நாடகா, உடுப்பு மாவட்டம் ஹவாஞ்சே பகுதியில் திருமணம் நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. இதில் பங்கேற்க உறவினரான ஜோஸ்னா லூயிஸ்(23) என்ற இளம்பெண் சென்றுள்ளார். மேலும், அங்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நடனம் ஆடிக்கொண்டு சென்றுள்ளார்.

திருமண வரவேற்பு விழாவில் நடனம் - மயங்கி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு! | 23 Year Old Girl Died In Wedding Karnataka

அப்போது திடீரென மயங்கி சுருண்டு கீழே விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அவர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் அதிகமாக மாரடைப்பில் உயிரிழக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.