கூட்டத்தில் பெண் மயங்கி விழுந்தும் நிர்வாகிகளை காக்க வைத்த நடிகர் விஜய் - ரசிகர்கள் ஆவேசம்!

Vijay Vijay Makkal Iyakkam members waiting angry
By Anupriyamkumaresan 1 வருடம் முன்
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சினிமா

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் நடிகர் விஜய்யிடம் வாழ்த்து பெறுவதற்காக பனையூரில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக நெடுநேரம் காத்திருந்தனர்.

இதில் ஒரு பெண் மயக்கமடைந்ததால், அவர் கணவர் மன்றத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்திவிட்டுச் சென்றார். அதன்பின்னரும் விஜய் வெளியே வராததால் தங்களை விஜய் சந்திக்க வேண்டும் என்று, ரசிகர்கள் அவரது வீட்டு முன்பாக சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

கூட்டத்தில் பெண் மயங்கி விழுந்தும் நிர்வாகிகளை காக்க வைத்த நடிகர் விஜய் - ரசிகர்கள் ஆவேசம்! | Vijay Makkal Iyakkam Member Waiting And Angry

அதன்பின்னரே விஜய் வெற்றி பெற்றவர்களை தனித்தனியாக சந்தித்து வாழ்த்துக்களை கூறினார். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 110 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நடிகை விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற சென்னையை அடுத்த பனையூரில் அமைந்திருக்கும் விஜய் வீட்டிற்கு சென்றனர்.

அங்கே விஜய் வீட்டின் கதவுகள் நெடு நேரம் வரைக்கும் திறக்காததால் ரசிகர்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தில் இருந்த ஒரு பெண் நெடுநேரமாக காத்திருந்து மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டியுள்ளார். எதையுமே காதில் வாங்காத நடிகர் விஜய் வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை.

கூட்டத்தில் பெண் மயங்கி விழுந்தும் நிர்வாகிகளை காக்க வைத்த நடிகர் விஜய் - ரசிகர்கள் ஆவேசம்! | Vijay Makkal Iyakkam Member Waiting And Angry

இதனால் மேலும் ஆத்திரமடைந்த ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அதன் பின்னரும் நீண்டநேரம் கழித்து நடிகர் விஜய் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.