பள்ளி மாணவ, மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர்கள் - 23 பேர் டிஸ்மிஸ்
மாணவ, மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர்கள் 23 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி, ஈரோடு, ஒசூர், சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மாணவிகள் ஆசிரியர்களால் தொந்தரவுகளுக்கு உள்ளான தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையில் 46 போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 238 ஆசிரியர்கள் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளனர்.
23 பேர் டிஸ்மிஸ்
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றச்சாட்டுகள் உறுதியான நிலையில், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 23 பேரை டிஸ்மிஸ் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, திண்டுக்கல், திருச்சி, நீலகிரி, புதுகை, விழுப்புரம், தர்மபுரி, நெல்லை மாவட்டங்களில் தலா ஒரு ஆசிரியர் என 7 பேரும், தொடக்கக் கல்வித்துறையில் 15 ஆசிரியர்கள் என மொத்தம் 25 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்களை ரத்து செய்யும் பணியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.