தமிழகத்தில் இந்தியை திணிப்பது திமுகதான் - தமிழிசை அதிரடி!
தமிழகத்தில் இந்தியை திமுகதான் திணிக்கிறது என்று தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தி
தமிழக பாஜக தென்சென்னை மாவட்டம் சார்பில் மகளிர் தின விழா நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன்,’’அடுத்த ஆண்டு மகளிர் தின விழாவை, பாஜக கூட்டணி ஆட்சியில், பாஜக பெண் அமைச்சர்கள் தலைமையில் கொண்டாடுவோம் ’’என்று கூறினார்.
திமுக
தொடர்ந்து பேசிய அவர்,’’ நமக்கு மூன்றாவது ஒரு மொழி தேவை. ஏனென்றால் அது வாய்ப்புகளை விரிவடைய செய்யும். என்று கூறினார். மேலும் புதிய கல்விக் கொள்கை என்றாலே, இந்தி என்று சொல்வதை நான் மறுக்கிறேன்.
தமிழகத்தில் இந்தியை திணிக்காத என்று சொல்லி நீங்கள் திணித்துக் கொண்டிருப்பதாகத் தமிழிசை கடுமையாக விமர்சித்தார். மேலும் பாஜகவுக்குத் தமிழ் உயிர் போன்றது. தமிழுக்கு ஒரு பங்கம் என்றால் முதலில் உயிர் கொடுப்பது பாஜக தொண்டராகத்தான் இருப்பார்கள் என்று கூறினார்.