கூலி வேலைக்காக வந்த பெண் - சிறுவன் உட்பட 6 பேர் செய்த கொடூரம்!
சிறுவன் உட்பட 6 பேர் சேர்ந்து வேலைக்கு வந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டு பாலியல் வன்கொடுமை
மத்திய பிரதேசம், திகாம்கர் பகுதியில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அங்கு, சத்தர்பூர் மாவட்டத்தில் இருந்து கூலி வேலைக்காக 23 வயது இளம்பெண் அழைத்து வரப்பட்டுள்ளார். கட்டிடத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், இரவில் பணிகள் நடந்து வரும் நிலையில், அங்கு வேலை பார்த்த 6 பேர் மது போதையில் இருந்துள்ளனர். அப்போது, இந்த இளம்பெண்ணை 6 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
தீவிர விசாரணை
அதனையடுத்து, உடனே பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், அந்த 6 பேரில் ஒருவர் கட்டிடத்தின் வாட்ச்மேன் என்பது தெரியவந்தது.
மேலும் அதில் ஒருவர் 16 வயது சிறுவன் எனவும் கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து 6 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.