8 தலைமுறை, 220 வருஷம்; மூடப்படாத கதவுகள் - இப்படி ஒரு வீடா? அதுவும் தமிழ்நாட்டில்!
சுமார் 220 ஆண்டுகளாக வீடு ஒன்று பூட்டப்படாமலேயே இருக்கிறது.
பழமையான வீடு
தஞ்சாவூர், குடமுருட்டி ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது நடுக்காவேரி கிராமம். இங்கு 2 நூற்றாண்டுகளாக வீடு ஒன்று அப்பகுதிக்கு பெருமை சேர்த்து வருகிறது. இதனை 1898ல் புண்ணக்கு என்ற பெண் கட்டியுள்ளார். யோகபுரி நாட்டாரின் பெண்களால் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.
சுண்ணாம்பு காரை கொண்டு இரண்டு அடி அகலத்தில் சுட்ட கல்லால் கட்டப்பட்டிருக்கிறது. காவிரி ஆற்றில் இருந்து வெள்ளம் தாக்கலாம் என்பதால், 8 அடி உயரத்தில் கட்டியுள்ளனர். இந்த வீட்டில் வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் யாரும் இது வரை வீட்டை காலி செய்து கொண்டு வெளியேறியது இல்லை.
மூடப்படாத கதவுகள்
மேலும், வீட்டின் முன் மற்றும் வெளிப்புற வாசற் கதவுகள் இரண்டும் திறந்தே இருக்கும். யார் வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் வீட்டில் தஞ்சம் கொள்ளலாம். சென்னை, பெங்களூரு, அமெரிக்கா என வேலை அல்லது படிப்பு நிமித்தமாக குடும்பத்தினர் சென்றாலும், அவர்களின் வாரிசுகள் அல்லது மூத்த தலைமுறையினர் என யாராவது தங்கியுள்ளனர்.
8 தலைமுறைகளாக நீடிக்கும் இந்த வீடு வெயில் காலத்தில் நல்ல குளிர்ச்சியுடனும், குளிர்காலத்தில் கதகதப்பாக இருக்கும் வண்ணமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெரிய அளவு கருங்கல்லால் ஆன ஆட்டுக்கல், அம்மிக்கல், நெல் கொட்டும் குதிர், உரல் உலக்கை போன்ற பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.