பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய 22 தலைவர்கள்...அதிரடியாக இந்தியா கூட்டணிக்கு ஆதரவு

BJP India Bihar Lok Sabha Election 2024
By Karthick Apr 04, 2024 12:47 PM GMT
Report

NDA கூட்டணி வலுவாக இருப்பதாக தலைவர்கள் கூறி வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் பெரும் அரசியல் நகர்வு நடந்துள்ளது.

NDA கூட்டணி

10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும் NDA கூட்டணி, மீண்டும் ஆட்சியை பிடித்திட தீவிரம் காட்டி வருகின்றது. மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதை முன்னிருந்து இந்த தேர்தல் மீண்டும் சந்திக்கிறது இந்த கூட்டணி.

22-leaders-exited-bjp-alliance-supports-indi-

வலுவான இந்தியா கூட்டணி எதிரில் அமைந்தாலும், மோடி அலை, 10 ஆண்டு ஆட்சியின் சாதனை போன்றவற்றை தீவிரமாக முன்னிறுத்தி வருகிறது பாஜக.

22-leaders-exited-bjp-alliance-supports-indi-

தென்னிந்தியாவில் அக்கட்சி பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறியது. ஆனால் திராவிட கட்சிகள் இல்லாத பெரிய கூட்டணியையே அமைத்துள்ளது பாஜக.

22-leaders-exited-bjp-alliance-supports-indi-

அதனை போலவே சிரோமணி அகாலி தளம் என்ற பஞ்சாப் மாநில அரசியலில் பெரும் ஆதிக்கம் கொண்டுள்ள கட்சியும் 25 ஆண்டுக்கால கூட்டணியை முறித்து கொண்டுள்ளது. இது பாதகமான விஷயமே.

நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் இது நிச்சயம் நடக்கும் - அண்ணாமலை உறுதி!

நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் இது நிச்சயம் நடக்கும் - அண்ணாமலை உறுதி!

22 தலைவர்கள்

ஆனால், இவை கூட்டணி, தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்குள் வந்துவிட்டதால் அது அரசியல் களத்தில் தற்போது எந்தவித விவாதமும் இல்லாத ஒன்று தான். தேர்தல் நெருங்கியுள்ள சூழலில் தற்போது பீகார் மாநிலத்தை அடிப்படையாக கொண்டு கட்சி ஒன்று பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

22-leaders-exited-bjp-alliance-supports-indi-

பிஹாரில் மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதியில் கூட்டணியில் 5 இடங்களில் போட்டியிடுகிறது லோக் ஜன சக்தி (எல்ஜேபி) கட்சி. ஆனால் தேர்தலில் மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கத்தை கண்டித்து கட்சியில் இருந்த முக்கிய 22 தலைவர்கள் கூண்டோடு வெளியேறியுள்ளார்கள்.

22-leaders-exited-bjp-alliance-supports-indi-

வெளியேறியது மட்டுமின்றி அவர்கள் அதிரடியாக இந்தியா கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். எல்ஜேபியின் தலைவரான சிராக்கின் நடவடிக்கைகளின் காரணமாக கட்சியில் இருந்து வெளியேறியதாக அவர்கள் ட தெரிவித்துள்ளனர்.