80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 21 வயது இளைஞன் - கொடூர சம்பவம்!

Sexual harassment Viluppuram
By Vinothini Jul 14, 2023 05:32 PM GMT
Report

 விழுப்புரம் அருகே வீட்டில் தனியாக இருந்த 80 வயது மூதாட்டியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சனியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தொல்லை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள வீரமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி அஞ்சலை. இவருக்கு 80 வயதான நிலையில் தனது மூத்த மகளுடன் வீட்டில் வசித்து வந்தார். இவர் வயது மூப்பின் காரணமாக வீட்டை விட்டு வெளியே செல்லாமல் முடங்கி கிடந்தார்.

21-years-old-man-brutaly-raped-80-years-old-women

இவரது மகள் உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார். அப்பொழுது மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவரின் எதிர்வீட்டில் குகன் என்ற 21 வயது இளைஞன் வசித்து வருகிறார். கஞ்சா போதையில் இருந்த இவர் அந்த மூதாட்டியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

தீவிர சிகிச்சை

இந்நிலையில், மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் இளைஞர் அங்கிருந்தினு தப்பிவிட்டார். பின்னர் அந்த மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர், அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

21-years-old-man-brutaly-raped-80-years-old-women

இந்த சம்பவம் குறித்து மூதாட்டியின் மூத்த மகள் அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.