அதிர்ச்சி.. ஈடன் கார்டன் மைதானத்தில் தூக்கில் தொங்கிய இளைஞர் - என்ன நடந்தது..?
ஈடன் கார்ட்னஸ் மைதானத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர்.
தற்கொலை
மேற்கு வாங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் உலகப்புகழ்பெற்ற 'ஈடன் கார்ட்னஸ்' கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் உள்ள கேலரி ஒன்றில், தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு சடலத்தை போலீசார் மீட்டனர்.
இறந்தவர் அந்த மைதானத்தில் பராமரிப்பாளராக பணிபுரியும் ஒருவரின் மகன் தனஞ்சய் பாரிக் (21) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞரின் உடலை உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
மேலும், மன அழுத்தத்தில் இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இது தற்கொலையா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்தவரின் உறவினர்களை அவரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.