தாஜ்மஹாலையெல்லாம் ஓரம் கட்டிய உலகின் விலையுயர்ந்த பங்களா - விலை தெரியுமா?
உலகிலேயே விலை உயர்ந்த பங்களா துபாயில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மார்பிள் பேலஸ்
துபாயில் வெர்சாய்ஸில் என்ற அரண்மனை உள்ளது. இது "மார்பிள் பேலஸ்" என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், இது இத்தாலிய மார்பிள் கல்லால் கட்டப்பட்டது. இதன் விலை 750 மில்லியன் திர்ஹம்கள் அதாவது 1,600 கோடி ரூபாய். சுமார், 60,000 சதுர அடிக்கு மேல் பரந்து விரிந்துள்ளது.

இதில் 4,000 சதுர அடி பெட்ரூம். தரை தளத்தில் பொழுதுபோக்கு மற்றும் உணவு மற்றும் பானங்களுக்கு இடம் உள்ளது. 15-கார் கேரேஜ், 19 கழிவறைகள், உட்புற மற்றும் வெளிப்புற நீச்சல் குளங்கள், இரண்டு மொட்டை மாடிகள், 80,000 லிட்டர் தண்ணீருடன் கூடிய பவளப்பாறை மீன்வளம் மற்றும் மின் துணை நிலையங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மக்கள் ஆர்வம்
ஒவ்வொரு விருந்தினர் அறையும் 1,000 சதுர அடி, இரண்டாவது பெரிய படுக்கையறை 2,500 சதுர அடி. இந்த வீட்டின் கட்டுமானம் சுமார் 12 ஆண்டுகள் ஆகியுள்ளது. மதிப்புமிக்க எமிரேட்ஸ் ஹில்ஸ் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ளதால், இந்த வீட்டை வாங்குவதற்கு மக்கள் ஆசைப்படுகிறார்கள்.

தற்போது இது விற்பனைக்கு உள்ளது. அதிக விலை காரணமாக இந்த வீட்டை 3 வாரங்களில் இரண்டு பேர் மட்டுமே பார்த்துள்ளனர். அரண்மனையை வாங்க ஆர்வம் காட்டிய 2 பேரில் ஒருவர் இந்தியர் என்று கூறப்படுகிறது.
