தேர்தல் கூட்டணிக்காக ரகசிய பேச்சுவார்த்தை? உறுதிசெய்த அண்ணாமலை

Tamil nadu BJP K. Annamalai
By Sumathi Mar 05, 2025 06:25 PM GMT
Report

தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

அண்ணாமலை

பாஜக சார்பில் தமிழக அரசு பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற விழாவில்

edappadi palanisamy - annamalai

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்டு, 'சமக்கல்வி எங்கள் உரிமை' கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

மகளிர் உரிமை தொகை பெறாதவர்களா நீங்கள்? - துணை முதல்வர் சொன்ன குட் நியூஸ்

மகளிர் உரிமை தொகை பெறாதவர்களா நீங்கள்? - துணை முதல்வர் சொன்ன குட் நியூஸ்

தேர்தல் கூட்டணி? 

மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை என்பது காங்கிரசின் கொள்கை. இதை மோடி எதிர்த்துள்ளார். முகாந்திரம் இல்லாத நிலையில் மக்களிடம் பயத்தை ஏற்படுத்தும் விதமாக இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்துள்ளது.

தேர்தல் கூட்டணிக்காக ரகசிய பேச்சுவார்த்தை? உறுதிசெய்த அண்ணாமலை | 2026 Bjp Election Alliance With Admk Annamalai

இந்த கூட்டம் தேவையற்றது. அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதற்கு முன் பாஜக எழுப்பிய கேள்விகளுக்கு பதில் இல்லை. அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு மூன்றாவது மொழியை கற்க வாய்ப்பு இல்லாமல் போகிறது. தமிழ்நாட்டில் 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்.

2026-ம் ஆண்டில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும். தேர்தல் கூட்டணிக்காக யாருடனும் நாங்கள் ரகசியமாக பேசவில்லை. தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. நேரம், காலம் வரும்போது கூட்டணி சம்பந்தமாக பேசுவோம் எனத் தெரிவித்துள்ளார்.