பட்ஜெட் 2023: அல்வா கொடுத்தார் நிதியமைச்சர் - என்ன தொடர்பு!
2023-24 பட்ஜெட்டுக்கு முந்தைய அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சியை தொடங்கியது.
பட்ஜெட்
2023 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2023-24 நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

அதற்கு முந்தைய தினமான ஜனவரி 31ஆம் தேதி அன்று பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. பொதுவாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்தாக சில நாள்களுக்கு முன் அல்வா கிண்டும் நிகழ்ச்சியை மத்திய நிதி அமைச்சகம் மரபாக மேற்கொள்ளும்.
அல்வா வழங்கும் விழா
அதன்படி, நிதி அமைச்சக அதிகாரிகள் பாரம்பரிய ''அல்வா'' கிண்டி வழங்கும் விழாவை இன்று நடத்தினர். அப்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டினார். இதில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர்கள் மற்றும் இதர மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்றத்தின் நார்த் பிளாக் பகுதியில் தான் நாட்டின் பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சக ஊழியர்கள் தயாரிப்பார்கள். பட்ஜெட் தாக்கலுக்கு முந்தைய 10 நாள் இந்த ஊழியர்கள் வீட்டிற்கு செல்லாமல் அங்கேயே தங்கி பட்ஜெட்டை தயாரிப்பார்கள்.
பட்ஜெட் குறித்த தகவல்கள் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதற்கா யாரும் வெளியே செல்ல அனுமதி இல்லை. நிதியமைச்சருக்கு மட்டுமே விதிவிலக்கு.