நடுவர் கண்டுபிடித்த செயல் - போட்டியிலிருந்து பாதியில் விலகிய பாகிஸ்தான்!

England Cricket Team Pakistan national cricket team
By Sumathi Aug 21, 2024 12:07 PM GMT
Report

டெஸ்ட் போட்டியிலிருந்து பாகிஸ்தான் பாதியில் விலகியது.

டெஸ்ட் போட்டி

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி கடைசி டெஸ்டில் லண்டன் ஒவல் மைதானத்தில் விளையாடியது. அப்போது பாகிஸ்தான் அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக கூறி நடுவர் ஐந்து ரன்கள் பெனால்டி விதித்தார்.

pakistan cricket team

உடனே, பாகிஸ்தான் அணி கேப்டன் இன்சாம் உல் ஹக், தாங்கள் பந்தை சேதப்படுத்தவில்லை என்று போட்டியில் விளையாட வர மாட்டோம் என்று கூறிவிட்டார்.

விஜய் என் டார்லிங்; வெட்கப்பட்ட மனு பாக்கர் - சுவாரஸ்ய சம்பவம்!

விஜய் என் டார்லிங்; வெட்கப்பட்ட மனு பாக்கர் - சுவாரஸ்ய சம்பவம்!

சர்ச்சை சம்பவம் 

இதனால் ஆட்டம் கைவிடப்பட்டு இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இதுகுறித்த விசாரணையில் பந்து சேதப்படுத்தவில்லை என்று தீர்ப்பளித்த ஐசிசி, போட்டியிலிருந்து பாதியில் விலகியதற்காக இன்சமாம் உல் ஹக்கிற்கு நான்கு ஒருநாள் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

நடுவர் கண்டுபிடித்த செயல் - போட்டியிலிருந்து பாதியில் விலகிய பாகிஸ்தான்! | 2006 Pakistan Team Forfeit Test Match England

இந்தப் போட்டியை டிராவாக அறிவிக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்த நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு டிரா என்று ஐசிசி முடிவை மாற்றியது.

இருப்பினும், அடுத்த ஆண்டே டிராவிலிருந்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக முடிவு மாற்றப்பட்டது. இது சர்வதேச கிரிக்கெட்டில் அப்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.