2000 வருட உலகின் பழமையான ஒயின் கண்டுபிடிப்பு - எங்கு தெரியுமா?
2000 வருட பழமையான ஒயின் ஒன்று கண்டுபிடிக்க பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்லறை
2019 ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் உள்ள கார்மோனா நகரில் வீட்டைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தபோது, பணியாளர்கள் திடீரென்று பழங்கால ரோமானிய கல்லறை ஒன்றை கண்டுபிடித்தனர். அதன் பிறகு அந்த கல்லறை குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது.
கல்லறை அருகே செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில் திடீரென மண் பானை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மூடியை திறந்தவுடன் உள்ளே பழுப்பு நிறத்தில் திரவம் ஒன்று இருந்துள்ளது. அந்த திரவத்தை ஆராய்ச்சி செய்ததில், மண் பானையில் இருந்த திரவம் அன்றைய காலத்து உள்ளூர் மது என தெரிய வந்துள்ளது. மேலும் இதுவே உலகின் பழமையான ஒயின் என்றும் கூறப்படுகிறது.
வெள்ளை நிற ஒயின்
மேலும் இது வெள்ளை நிற ஒயினாக இருந்திருக்கலாம் 2,000 ஆண்டுகளில் இரசாயன மாற்றம் நிகழ்ந்து இப்போது அதன் நிறம் பழுப்பு-சிவப்பாக மாறிவிட்டது என்று கூறப்படுகிறது. மேலும் மதுவைத் தவிர, ரோமானிய நபர் ஒருவரின் எலும்புகளும் அதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பொதுவாக, ஒரு மது எவ்வளவு பழையதாகிறதோ, அவ்வளவு சுவையாக இருக்கும் என நம்பப்படுகிறது. தற்போது 2,000 ஆண்டு கால பழமையான ஒயினை கண்டுபிடித்தது ஆராச்சியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.